Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

9வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி.. 14வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி

Advertiesment
ambani adani
, புதன், 1 பிப்ரவரி 2023 (15:18 IST)
உலக கோடிஸ்வரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த அதானிசமீபத்தில் 11-வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது 14வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதல் 10 இடங்களிலிருந்து நேற்று முன்தினம் அதானி வெளியேற்றப்பட்டார் என்பதும் இதனை அடுத்து அவர் 11 வது இடத்தில் இருந்தார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இன்று மீண்டும் அவரது நிறுவனங்களின் பங்குகள் சரிந்து உள்ளதை அடுத்து 14வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் உலக கோடிஸ்வரர் பட்டியலில் பத்தாவது இடத்திலிருந்து தொழிலதிபர் அம்பானி ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்
 
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து அவரது சொத்து மதிப்பும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மினி பட்ஜெட்டில் ஓப்போ ஏ78 5ஜி! குடுக்குற காசுக்கு வொர்த்தா?