Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரோஜா துணை முதல்வராகிறார் ? ஆந்திர அரசியலில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (19:41 IST)
ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை நியமனம் செய்யப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்பொழுது 5 துணைமுதல்வர்களில் ஒருவராக நடிகை ரோஜா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றதில் ஜெகன் மோகன் ரெட்டி,  மாநிலத்தில் 25 அமைச்சர்களும் 5 துணை முதலமைச்சர்களும் செயல்படுவார்கள் என்றும்,  இவர்களின் பதவி பிரமாணம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதகாவும் கூறியதாக தகவல் வெளியானது.
 
மேலும் 5 துணை முதலமைச்சர்களில் ஒரு பட்டியல் இனத்தவரும்,  ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரும், ஒரு சிறுபான்மையினரும்,காபு இனத்தை சேர்ந்த ஒருவரும் பதவி ஏற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஆந்திர அரசியலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வேகத்திற்கு ஏற்ப தற்போது அம்மாநில அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆந்திர மாநிலத்தில் 5 துணைமுதல்வர்களில்  ஒருவராக நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜாவும் பதவியேற்கலாம் என்று தற்போதுசெய்திகள்   வெளியாகின்றன.
 
இதற்கு முன்பு ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இரண்டு துணை முதல்வர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments