Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை படுக்கைக்கு அழைத்தனர் : பாலா பட நடிகை பரபரப்பு புகார்

என்னை படுக்கைக்கு அழைத்தனர் : நடிகை புகார்

Advertiesment
Actress puvisha
, சனி, 21 மே 2016 (08:05 IST)
படப்பிடிப்பில் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தமிழ் நடிகை ஒருவர் புகார் கூறியுள்ள விவகாரம்  திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மலேசியாவை சேர்ந்த தமிழ் நடிகை புவிஷா மனோகரன். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். இவர் இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
 
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகாவிற்கு தங்கையாக நடித்துள்ளார்.
 
இவர் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தான் கன்னடத்தில் நடித்த  ‘ஜில் ஜில்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது, அப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் உதய் பல்லார் ஆகியோர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறினார். 
 
இதுபற்றி அவர் கூறும்போது “என்னை ஜில்ஜில் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததில் இருந்தே தயாரிப்பாளர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஒளிப்பதிவாலர் உதய்பல்லார் ஆகியார் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். என்னை ஹோட்டல் அறைக்கு வரச் சொல்லி வற்புறுத்தி எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தனர். 


 

 
இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது போலீசாரிடம் புகார் கொடுக்க உள்ளேன்” என்று புவிஷா கூறினார்.
 
அவர் புகார் அளித்த பின்பு, அவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலை நடத்தாவிட்டால் அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன் : கருணாநிதி அதிரடி