Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் ஹிட்லரின் ஆட்சி!- பிரகாஷ்ராஜ் வெளியிட்ட ஃபோட்டோ!

இந்தியாவில் ஹிட்லரின் ஆட்சி!- பிரகாஷ்ராஜ் வெளியிட்ட ஃபோட்டோ!
, செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:48 IST)
இந்தியாவில் ஹிட்லரை போன்றதொரு சர்வதிகார ஆட்சி நடைபெறுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் நாட்டில் நிலவும் சூழல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் இடம் பெற்றுள்ள புகைப்படத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தை கவிழ்த்து வைத்தது போல ஹிட்லரின் மீசை உள்ளது. அந்த படத்தை பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ் இந்தியாவிலும் சர்வாதிகார ஆட்சி தலையெடுக்கும் முன் அதை அகற்ற வேண்டியது அவசியம் என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ் தனது நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து ட்விட்டர் மூலம் மக்களுடன் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டதும், பெங்களூரில் மக்களவை தேர்தலின் போது சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2020-க்கு 2020 ஆஃபர்... ஜியோவின் New Year Offer!!