Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீர் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய நடிகர் மோகன்லால்!

திடீர் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய நடிகர் மோகன்லால்!
, சனி, 14 மே 2016 (12:40 IST)
கேரள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடிகர் மோகன்லால் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரான கணேஷ் குமாருக்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 

 
கேரளா பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரும் கேரள திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகியுமான கணேஷ் குமாருக்கு வாக்குகள் கேட்டு நடிகர் மோகன்லாலும், இயக்குநர் பிரியதர்ஷனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது பேசிய மோகன்லால், “நான் ஒரு நடிகனாக இங்கு வரவில்லை. கணேஷ் குமாருக்கு வாக்குகள் கேட்டு அவரது மூத்த சகோதரனாக வந்துள்ளேன். நான் மிக அதிக நட்பு வைத்துள்ள, மிகவும் பெருமைப்படுகிற நல்ல மனிதர் கணேஷ் குமார்.
 
இந்தப் பத்தனாபுரம் தொகுதி மக்களுடன் கணேஷ் குமார் வைத்துள்ள நட்பை நான் நன்கு அறிவேன். பத்தனாபுரம் தொகுதி பற்றியும், அதற்கு, தான் ஆற்றியுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பற்றியும் கணேஷ் குமார் என்னிடம் தெரிவித்துள்ளார்.
 
நான் இதற்கு முன்பே இங்கு வந்திருக்க வேண்டியவன். ஆனால் வெளிநாட்டில் படப்பிடிப்பு இருந்ததால்தான் இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறேன்” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பக்தரை மோசமாக தாக்கும் மதிமுக தொண்டர்: அமைதியாக வேடிக்கை பார்த்த வைகோ