Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் பலாத்கார வழக்கை திரும்ப பெறாத பெண் மீது ஆசிட் வீச்சு

பாலியல் பலாத்கார வழக்கை திரும்ப பெறாத பெண் மீது ஆசிட் வீச்சு
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (19:35 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வழக்கை திரும்ப பெறாததால் அவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
உத்திரப் பிரதேச மாநிலம் மகோன கிரமத்தை சேர்ந்த 25 வயது பெண்ணை சுர்ஜித் என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இந்த புகாரை விசாரித்த காவலர்கள் சுர்ஜித் மீது கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து சிர்ஜித் தன் மீது உள்ள வழக்கை திரும்ப பெறும்படி அந்த பெண்ணை எச்சரித்துள்ளார். ஆனால் வழக்கை திரும்பப் பெற அந்த பெண் மறுத்துள்ளார்.
 
இந்நிலையில், திங்களன்று மாலை அந்த பெண் மீது சுர்ஜித் ஆசிட் வீசி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் முகம் மற்றும் கழுத்தில் காயமடைந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் சகோதரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இது வரை சுர்ஜித் மீது காவலர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி விவகாரம் : உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி ஜெயலலிதா ஆலோசனை