Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை முயற்சி வழக்கில் கைதானவருக்கு கொரோனா – காவல் நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (17:16 IST)
புதுச்சேரியில் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை கடந்த 7 ஆம் தேதி முகமது கில்லால், சதீஷ்,உள்ளிட்ட ஐவர் கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவரை வெட்டிய  மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அவர்கள் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். மற்ற நால்வரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்த காவல் நிலையம் முழுவதும் இன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் அந்த காவல் நிலையத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments