Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு தலைவர் தேர்தல்: 79 மனுக்கள் நிராகரிப்பு

Advertiesment
draupathi vs yashvandh
, வியாழன், 30 ஜூன் 2022 (14:03 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். 
 
மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 87 பேர் போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்ததாகவும், அதில் 79 மனுக்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள்  சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
இதுகுறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதால் இருவரும் போட்டியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு தவிர மேலும் 6 பேர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்!