முதல்வர் அலுவலகத்தில் நான் தாக்கப்பட்டேன்: ஆம் ஆத்மி பெண் எம்பி அதிர்ச்சி தகவல்..!

Mahendran
திங்கள், 13 மே 2024 (13:17 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் நான் தாக்கப்பட்டேன் என ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ எம்பி சுவாதி மாலிவால் என்பவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம் பி சுவாதி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் அவருடைய உதவியாளரால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார் 
 
அவர் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்த நிலையில் இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமினில் வெளிவந்திருக்கும் நிலையில் திடீரென அவரது பிஏ தாக்கியிருப்பதாக அவருடைய கட்சியின் பெண் எம்பி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா தன் எக்ஸ் பக்கத்தில்,`` எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி பதில் சொல்லியாக வேண்டும். கெஜ்ரிவாலின் பி.ஏ  சுவாதி மாலிவாலை அடித்தாரா? முதல்வர் அலுவலகம் விளக்கம் அளிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments