Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஞ்சாப் முதல்வரே பின்னடைவு.. டெல்லியை தாண்டும் ஆம் ஆத்மி! – துடைப்பத்துடன் கொண்டாட்டம்!

பஞ்சாப் முதல்வரே பின்னடைவு.. டெல்லியை தாண்டும் ஆம் ஆத்மி! – துடைப்பத்துடன் கொண்டாட்டம்!
, வியாழன், 10 மார்ச் 2022 (10:48 IST)
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் பஞ்சாப் முதல்வரே பின்தங்கியுள்ளார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி பஞ்சாபில் அநேக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியை கடந்து முதல் வெற்றி இது என்பதால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களை கையில் ஏந்தி கொண்டாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 ஆயிரமாக தொடரும் தினசரி பாதிப்புகள்! – கொரோனாவிலிருந்து மீளும் இந்தியா!