திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (19:00 IST)
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றிய நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என திமுக தலைவர் மற்றும் முதல் அமைச்சர் முக. ஸ்டாலின் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில், திமுகவுக்கு முன்னதாக ஆம் ஆத்மி, வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான் என்பவர், இந்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்கில், அரசியல் அமைப்பையே சவால் செய்யும் இந்த மசோதா, முஸ்லிம்களின் மத மற்றும் கலாச்சார சுயாட்சியை குறைக்கிறது என்றும், தன்னிச்சையான நிர்வாக தலையீட்டுடன் செயல்படுகிறது என்றும், சிறுபான்மையினரின் மத மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமைகளை பறிக்கிறது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments