ஆதார் விவரங்களை இலவச திருத்த மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆதார் விவரங்களை இலவசமாக திருத்திக் கொள்ளலாம் என்ற வசதி சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மை ஆதார் என்ற செயலி அல்லது இணையதளம் மூலம் முகவரி உட்பட பல்வேறு தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி இதுவரை இலவசமாக இருந்து வந்த நிலையில் நேற்றோடு இந்த அவகாசம் முடிந்துவிட்டது.
இனிமேல் முகவரி உட்பட மாற்றம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் தற்போது இலவசமாக திருத்திக்கொள்ள மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் ஆகியவற்றின் மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி ஆகியவற்றை திருத்திக்கொள்ள 2024ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி வரை இலவசமாக தெரிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.