Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க காலக்கெடு நீடிப்பு!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:30 IST)
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க காலக்கெடு நீடிப்பு!
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டுமென ஏற்கனவே செப்டம்பர் 30 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஆதார் எண்ணுடன் பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன என்பதும் வங்கிகணக்கு, குடும்ப அட்டை உள்பட பல ஆவணங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஆதார் எண்ணை பான் என்னுடன் கண்டிப்பாக அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments