இளைஞர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஓட்டுதல், டிராபிக் ரூல்ஸை மதிக்காமல் வண்டியை ஓட்டுதல் ஆகிய காரணங்ளால் சாலை விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசும் எவ்வளவு தான் கடுமையான நடவடிக்கைகளை கொண்டு வந்தாலும் பலர் இதனை பின்பற்றுவதில்லை.
இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், தலையில் ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசிக்கொண்டே தவறான பாதையில் சென்றதால் எதிர்திசையில் வந்த வாகனம் மோதி நிலை குலைந்து போனார்.
படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். உடம்பில் வேறு எங்குமே காயம் ஏற்படாத நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவரது நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது.