Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பப்ஜியால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!!

Advertiesment
பப்ஜியால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!!
, வெள்ளி, 22 மார்ச் 2019 (14:47 IST)
தெலங்கானாவில் எந்நேரமும் குனிந்து கொண்டே செல்போன் விளையாடிய 20 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இரவு பகலென எல்லா நேரங்களிலும் பப்ஜி விளையாட்டை இணையத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரையும் மனதளவில் அடிமையாக்கி விடுகிறது. மேலும்  இந்த விளையாட்டின் வீரியத்தால் பல வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சமீபத்தில்கூட மகாராஷ்டிராவில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது சார்ஜ் தீர்ந்து போன ஆத்திரத்தில் நபர் ஒருவர் மற்றொரு நபரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
பப்ஜி கேமை தடைவிதிக்க கோரி நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில் தெலங்கானாவில் எந்நேரமும் குனிந்து கொண்டே செல்போன் விளையாடிய 20 வயது இளைஞர் ஒருவருக்கு கழுத்து நரம்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலைனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி விளையாட்டை உடனடியாக தடை செய்யுமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக ஒரு ’வன்முறை ’கட்சி : அதன் தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது - ராமதாஸ்