Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது

Advertiesment
17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது
, திங்கள், 16 ஜூலை 2018 (09:16 IST)
கேரளாவில் 17 வயது சிறுவனை இளம்பெண் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் அதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
கேரளாவை சேர்ந்த பூஜா(28) என்ற பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் பேருந்தில் தான் ஆபிஸுக்கு சென்று வீடு திரும்புவார்.
 
அப்படி இருக்கும் வேளையில், பேருந்தில் கிளீனராக இருக்கும் 17 வயது சிறுவனுடன் பூஜாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் அந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற பூஜா, அவனை 2 வாரங்களுக்கு மேல் வீட்டினுள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
அவரது பிடியிலிருந்து தப்பித்து வந்த சிறுவன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தான். புகாரின்பேரில் பூஜாவை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்தநாளன்றே உயிரிழந்த பெண் செய்தியாளர்