Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் - கடிதம் அனுப்பிய பெண் !

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (14:16 IST)
உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது கோர்ட்டின் கடைநிலை ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அசிஸ்டெண்டாக சில ஆண்டுகள் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குடியிருப்பு அலுவலகத்தில் ரஞ்சன் கோகாய் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறப்பு விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இந்த பாலியல் அத்துமீறல் மட்டுமல்லாமல் இதனால் தனது குடும்பத்தைச் சேர்ந்த கணவரும் அவரது தம்பியும் காவல்துறையில் தங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை நீதிபதி ரஞ்சன் கோகாய் முழுதாக மறுத்துள்ளார்.  அவர் ‘ என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அவர் பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இதனால் நீதித்துறையின் சுதந்தரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சக நீதிபதியான அருண் மிஸ்ரா ‘ ஊடகங்கள் இந்த பிரச்சனையில் கவனமாக செயல்படவேண்டும். இதுவரை எந்தவிதமான உத்தரவும் இந்த தீர்ப்பில் பிறப்பிக்கவில்லை’ எனவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது என மற்றொரு நீதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்