ரயில் பயணம் எல்லோருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் செல்வதற்கும், புதிய இடங்களுக்குச் செல்வதற்கும், ரயில் பயணங்கள் ஏற்றதாக உள்ளது. இதிலுள்ள, கழிவறை, படுக்கை வசதி போன்றவற்றால் பலரும் இப்பயணத்தை தேர்வு செய்கின்றனர்.
ஆனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, பேருந்து போல இதிலும் படிகளில் பயணம் செய்வது வழக்கமாக உள்ளது.
படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை விளையாட்டாக செய்து வருகின்றனர். இதனால் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது. அதில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
மின்சார ரயில்களிலும் லோக்கல் டிரெயின்களிலும் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதை தடுக்க ரயில்வேதுறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், இன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞர் படியில் தொங்கிக் கொண்டு செல்லும்போது, எதிர்பாரா விதமாக மின்கம்பம் ஒன்றின் மீது மோதி இளைஞர் துடிதுடித்து கீழே விழுந்தார்.
இந்த சம்பவம் எப்போது நடந்தது வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தவிர்க்க வேண்டுமென பலரும் கூறி வருகின்றனர்.