Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி அதிகாரியை செருப்பால் அடித்த ஆசிரியை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (11:14 IST)
ஆந்திர மாநிலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை, ஆசிரியை செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் சக ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மார்க்காபுரத்தில் ராம்தாஸ் நாயக் என்பவர் கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராம்தாஸ் நாயக், பள்ளி ஆசிரியை ஒருவருக்கு சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஆசிரியை பல முறை கண்டித்த போதும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
சம்பவத்தன்று தனது அறையில் அமர்ந்திருந்த ஆசிரியையிடம், ராம்தாஸ் தனது வழக்கமான வேலையை காட்டியுளார். இதனால் கடுங்கோபமடைந்த ஆசிரியை தனது காலணியை எடுத்து ராம்தாஸை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள், ஆசிரியையை சமாதனப்படுத்தினர். இதுகுறித்து ஆசிரியை, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
 
நாட்டில் தினந்தோறும் பல்வேறு பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுபோல் செய்யும் காம மிருகங்களுக்கு அவ்வப்போது  கடுந்தண்டணை வழங்கினால் தான் பாலியல் கொடுமைகள் நடைபெறாமல் இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்