Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.சி வாங்கச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற ஆசிரியர்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (09:14 IST)
பிளஸ் 2 மாணவி ஒருவர், தான் படித்த ஸ்கூலில் டி.சி வாங்கச் சென்ற போது அந்த பள்ளி ஆசிரியரே அவரை கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சிறுமிகள் மீது ஏகப்பட்ட வன்கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. சிறுமிகளை வன்கொடுமை செய்யும் அயோக்கியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அரசு அறிவித்த போதிலும் இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.
 
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிளஸ் 2 படிக்கும் பெண் ஒருவர் தான் படித்த பள்ளியில் இருந்து வெளியேற டிசி வாங்க பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விஜய் தங்கார் என்பவர் தனி அறைக்கு அழைத்து சென்று அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அங்கு வந்தவர்கள் அந்த மாணவியை மீட்டனர்.
 
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைகளுக்கு அரணாய் இருக்க வேண்டிய ஆசிரியரே இப்படி செய்திருப்பது அப்பகுதி வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்