Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா ஆளுநராக மீண்டும் தமிழரா.? ரேசில் பாஜக மூத்த தலைவர்கள்..!

Senthil Velan
வெள்ளி, 19 ஜூலை 2024 (14:22 IST)
தெலுங்கனா மாநிலத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரை ஆளுநராக  மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் வரும் 31ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஆர்.என்.ரவியையே மீண்டும் தமிழக ஆளுநராக தொடர குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை பரிந்துரை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆளுநர் ரவியே இன்னும் சில வருடங்களுக்கு தமிழ்நாட்டின் ஆளுநராக நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அதற்கான உத்தரவை விரைவில் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.   
 
தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்த நிலையில், அம்மாநில ஆளுநர் பொறுப்பையும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பதவியையும் கூடுதலாக ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கும் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனே கவனித்து வருகிறார்.
 
இந்நிலையில், இந்த இரண்டு மாநிலங்களும் புதிய ஆளுநர்களை விரைவில் குடியரசுத் தலைவர் நியமிக்கவுள்ளார். ஏற்கனவே, தமிழரான  தமிழிசையே தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு ஆளுநராக இருந்த நிலையில், மீண்டும் ஒரு தமிழரையே தெலுங்காவிற்கு ஆளுநராக நியமிக்க மத்திய அரசு விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக பாஜகவில் முக்கிய நபராகவும் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளராவும் இருந்த ஹெச்.ராஜா பெயரும் ஆளுநர் ரேசில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ALSO READ: மின்வாரியத்தில் மிகப்பெரிய மோசடி.! மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.! அன்புமணி ஆவேசம்...!
 
புதுச்சேரியை பொறுத்தவரை தமிழர் அல்லாத வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவரையே துணை நிலை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி போன்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியை ஆளுநராக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழருடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments