ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. மீட்பு பணி தீவிரம்

Arun Prasath
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (15:59 IST)
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த 60 பேரும் நீருக்குள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் தேவிப்பட்டினம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த 60 பேரும் ஆற்றில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுற்றுலா பயணிகளை கண்டி பொச்சம்மா கோவிலிலிருந்து, பாபிகொண்டலு என்ற இடத்திற்கு படகில் அழைத்துச் செல்லும் வழியில் கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுமதிக்கப்பட்ட ஆட்களை விடவும் அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே படகு கவிழ்ந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் நீர் அதிகமாக இருந்ததும் காரணம் எனவும் கூறப்படுகிறது. சம்பவத்தை அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் 10 பேரை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments