பிராமணர்களுக்கு தனி டாய்லட்
ஆண், பெண் என்று தான் பல இடங்களில் டாய்லெட்டுக்கள் இருக்கும் என்பதை பார்த்திருக்கின்றோம். சில முற்போக்கு தன்மை இருக்கும் இடங்களில் திருநங்கைகளுக்கும் தனியாக டாய்லெட்டில் இருக்கும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் ஆண், பெண் மற்றும் பிராமணர்கள் என மூன்று டாய்லட்டுக்கள் இருந்தது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று புகைப்படம் எடுத்து அம்பலப்படுத்தியது
கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ள கோவில் ஒன்றில் மூன்று டாய்லட்டுக்கள் இருப்பதை பார்த்த ஆங்கில ஊடகமொன்றின் செய்தியாளர் அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பல சமூக வலைதள பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த கோவில் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்
இதுகுறித்து கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்தபோது ’அந்த போர்டு 25 வருடங்களுக்கு முன் வைத்தது. கோவில் நிர்வாகிகள் யாரும் அந்த பக்கம் செல்வது இல்லை என்பதால் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். பக்தர்கள் மட்டுமே அந்த டாய்லெட்டுக்களை பயன்படுத்து வந்தனர். இருப்பினும் இது குறித்து தகவல் தெரிவித்த பத்திரிகையாளருக்கு நன்றி. உடனடியாக அந்த பலகை அகற்றப்படும் என்று கூறியிருக்கிறார்
கேரளா போன்ற முற்போக்கு தன்மை கொண்ட மாநிலத்திலேயே இவ்வாறு ஆண் பெண் பிராமணர் என மூன்று விதமான டாய்லெட்டுகள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது