Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ள உறவால் விபரீதம்! கமல் பட பாணியில் பெண் கொலை!

Webdunia
ஞாயிறு, 13 ஜனவரி 2019 (13:54 IST)
கமல் நடித்த பாபநாசம் பட பாணியில் இளம் பெண்ணை கொன்று வழக்கை திசை திருப்பியவர்கள் இரண்டு வருடங்களுக்கு பிறகு சிக்கினர்.
மத்திய பிரதே மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெகதீஷ். இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்னர். இவருக்கு அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டிவிங்கிள் டாக்ரேவு என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி உள்ளார்.பின்னாளில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
 
இதையடுத்து அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு ஜெகதீஷ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் டிவிங்கிள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் வெளியில் சொல்வேன் என மிரட்டியுள்ளார்.  இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்த ஜெகதீஷ் , டிவிங்கிளை தனது மூன்று மகன்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார்.
 
அதன் படி 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி டிவிங்கிளை தனியாக காரில் அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்து வேறு ஒரு இடத்தில் புதைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் வந்துவிட்டனர். இதனிடையே மகளை காணாத டிவிங்கிளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த போலீசார், ஒரு இடத்தில் யாரையோ கொன்று புதைத்திருப்பதாக எண்ணி தோண்டி பார்த்தனர். அது நாய் என தெரியவந்ததால் விட்டுவிட்டனர். 
 
 2 ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கை கிடப்பில் போட்டனர். இதனிடையே மீண்டும் வழக்கை தூசி தட்டிய போலீசார் ஜெகதீசுடன் டிவிங்கிள் பழகியதை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து அவரிடம் விஞ்ஞான பூர்வமாக (brain electrical oscillation signature) விசாரித்தனர். அந்த விசாரணையில் ஜெகதீஷ் குடும்பத்துடன் சேர்ந்து டுவிங்கிளை கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர்.
 
அதில் சில உண்மைகள் தெரியவந்ததது. கொலைக்கு முன்பு ஜெகதீஷ் மற்றும் அவரது மகன்கள் அஜய் தேவ்கான் நடித்த த்ரிஷயம் படத்தை (கமல் நடித்த பாபநாசம் ரீமேக்) பார்த்துள்ளனர். அதன்பின்னர் கொலையை திட்டமிட்டு செய்துவிட்டு பாபநாசம் படப்பாணியில் வழக்கை திசை திருப்பியது தெரியவந்தது.
 
இந்த வழக்கில் ஜெகதீஷ், அஜய், விஜய் வினஸ், நீவேஷ் காஷ்யப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments