மரணமடைந்த சகோதரியை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், அவரது சடலத்தை வீட்டிலே வைத்து வாழ்ந்து வந்துள்ளார் ஒரு மருத்துவர். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கததை சேர்ந்தவர் நில்மணி தாரா(70). இவர் ஒரு மருத்துவர். இவருக்கு புரவி, சுரபி என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவர்கள் மூவருக்குமே திருமணம் ஆகவில்லை. இதனால் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். வயது முதிர்ச்சியின் காரணமாக நில்மணியின் சகோதரி சுரபி, ஒரு வாரத்திற்கு முன்பு காலமானார்.
வேலையை இழந்ததால் சகோதரியின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் நில்மணி தாரா தவித்து வந்துள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு நிதியுதவி அளித்தனர். ஆனால் அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். சடலத்தை வீட்டிலே வைத்து வாழ்ந்து வந்துள்ளார். 4 நாட்கள் ஆகியும் உடலை தகனம் செய்யாததால், துற்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தங்களின் சொந்த செலவில் சுரபியின் உடலை அடக்கம் செய்தனர்.