Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 சதவீதம் தடுப்பூசி - சாதனை படைத்த A & N !!

Advertiesment
Andaman and Nicobar Islands
, ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (15:25 IST)
கொரோனாவுக்கு எதிராக 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறது அந்தமான் நிக்கோபார் தீவுகள். 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்த நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் பல கோடி மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்தியில் முதலாவதாக, 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறது அந்தமான் நிக்கோபார் தீவுகள். கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுள்ள 2.86 லட்சம் பேரும் அங்கு கோவிஷீட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுள்ளனர். 
 
மேலும் இங்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவை எதிர்த்து போராட வேண்டும் - அதிமுகவுக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ்!