Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளின் பெயரை குழந்தைக்கு வைத்த தாய்!

Advertiesment
காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளின் பெயரை குழந்தைக்கு வைத்த தாய்!
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:14 IST)
காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளின் பெயரை குழந்தைக்கு வைத்த தாய்!
கொரோனா வைரஸ் நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கடும் சிக்கலில் உள்ள நிலையில் தற்போது மனிதர்களிடையே ஒளிந்திருந்த மனித நேயமும் வெளிப்பட்டு வருகிறது என்பதை பல சம்பவங்கள் இருந்து நாம் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது ஒரு பெண் மருத்துவமனைக்கு செல்வதற்கு தவித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த பக்கம் வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அந்த பெண்ணுக்கு உதவி செய்து அவரை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தார்
 
அந்த பெண்ணுக்கு சில நிமிடங்களில் அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தன்னை காப்பாற்றிய அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பெயரை அந்த தாய் கேட்டறிந்து அவரின் பெயர் தயாவீர்சிங் என்பதை அறிந்து உடனடியாக தனது ஆண் குழந்தைக்கு அதே பெயரை வைத்துள்ளார் 
 
இதுகுறித்து தயாவீர்சிங் கூறுகையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அந்த குழந்தைக்கு என்னுடைய பெயர் வைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நான் மதிக்கப்பட்டவராக கருதப்படுகிறேன் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீரோ வட்டியில் கடன்: ஆந்திர முதல்வரின் அசத்தல் திட்டம்