Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டம்- காங்., பொதுச்செயலாளர்

Advertiesment
ragul, nithishkumar, malligarjuna gharge
, திங்கள், 22 மே 2023 (20:05 IST)
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்திற்கான தேதி, இடம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 17 வது மக்களவை தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு 20 வது மக்களை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக பல கட்சிகள் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி, இன்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இவர்களின் சந்திப்பிற்குப் பின், காங்கிரச் கட்சிப் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’பெரிய எண்ணிக்கையிலான எதிர்க்கட்சிகள்  கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. ஓரிரு நாட்களில் இக்கூட்டத்திற்கான நாள் மற்றும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மேலும்,  பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும்  நடவடிக்கைகளில் ஐக்கிய ஜனதா கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ஈடுபட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி  வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப் பதிவு!