Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
, வியாழன், 20 ஜூலை 2023 (10:19 IST)
வட மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்து தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
 இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தெரிவித்துள்ளது. 
 
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஒடிசா  மாநிலத்தின் பல பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்றும், ஜூலை 24-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீட்கப்பட்ட நடராஜர், திருஞானசம்பந்தர் சிலை.. மனம் மகிழ்கிறது என அண்ணாமலை டுவிட்..!