Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார்: கண்டெடுக்கப்பட்ட கடிதத்தால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:16 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் சென்று கொண்டிருக்கும் நிலையில் நடைபயணத்தின் போது அவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என்று கண்டெடுக்கப்பட்ட கடிதத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாக நடைபயணம் சென்று வருகிறார் என்பதும் தற்போது அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கடையின் வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் ராகுல்காந்தி வெடிவைத்து கொல்லப்படுவார் என எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த கடிதத்தை எழுதியது யாரென்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது புரளியாக இருந்தாலும் இந்த புரளியை கிளப்பியது யார் என்று கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என்று மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments