ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பத்தே நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த ஆறே மணி நேரத்தில் விவசாயக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி மூன்று மாநிலங்களிலும் இருந்தும் வந்தது.
கொடுத்த வாக்குறுதியை ஆறே மணி நேரத்தில் காங்கிரஸ் நிறைவேற்றிவிட்டதால் பாஜக ஆளும் மாநிலங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதுதான் மின்சார்ட கட்டண சலுகை
குஜராத் கிராம மக்களின் ரூ.625 கோடி மின் கட்டணம் தள்ளுபடி என்ற அறிவிப்பை குஜராத் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது குஜராத் கிராமப்பகுதியில் உள்ளவர்கள் முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதே திட்டம் ஏற்கனவே தமிழகத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள், ரூ.500 ரூபாய் மட்டுமே செலுத்தி, தங்கள் இணைப்பை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குஜராத் மாநில அரசு அறிவித்திருக்கிறது.