Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2016 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக இது இருக்கும்!

Advertiesment
2016 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக இது இருக்கும்!
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (09:20 IST)
ஒடிசா மாநிலம் கன்சாரிகாலா கிராமத்தை சேர்ந்தவர் சம்பாரு பிரஷகா.


 
 
இவரது மனைவி பங்காரி பிரஷ்கா நிறைமாத கர்ப்பிணியான இருக்கிறார். இந்நிலையில், பங்காரி பிரஷ்காவிற்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை, உடடினயாக சுகாதார மையத்திற்கு அழைத்து செல்வதற்காக அவரது கணவர் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ப்பு கொண்டார்.
 
அதன் பிறகு, இரண்டு மணி நேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸ், அவர் வீட்டுக்கு செல்ல வழி இல்லாமல், வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே நின்று விட்டது.
 
இதை அடுத்து பங்காரியை அவரது கணவர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றினார். இந்த நிகழ்வை ஒருவர் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் விட்டுள்ளார். அதனை தொடர்ந்து, அந்த பாசமான கணவருக்கு நெட்டிசன்களிடம் இருந்து  பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தையால் பட வாய்ப்புகளை இழக்கும் பிரபல நடிகை!