Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் பொண்டாட்டி மூஞ்சில தாடி இருக்கு: ப்ளீஸ் எனக்கு டைவர்ஸ் குடுங்க

Advertiesment
என் பொண்டாட்டி மூஞ்சில தாடி இருக்கு: ப்ளீஸ் எனக்கு டைவர்ஸ் குடுங்க
, செவ்வாய், 19 ஜூன் 2018 (13:18 IST)
மனைவி முகத்தில் தாடி உள்ளதால், தமக்கு டைவர்ஸ் வழங்கும் படி அவரது கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமாதாபாத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார்.
 
டைவர்சுக்கு அவர் கூறிய காரணம் பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது. தங்கள் குல வழக்கப்படி திருமணத்தின் போது மணமகளின் முகம் மூடப்பட்டிருக்கும். இதனால் மணமகளின் முகத்தை பார்க்க முடியாமல் போனது.
 
திருமணத்திற்கு பின்பு தான் என் மனைவிக்கு முகத்தில் தாடி வளர்ந்திருப்பதும், அவருக்கு ஆண் குரல் இருப்பதும் எனக்கு தெரியவந்தது.
 
ஆதலால் அவருடன் எனக்கு வாழப்பிடிக்கவில்லை. எனவே எனக்கு விவாகரத்து கொடுங்கள் என நீதிபதியிடம் அந்த நபர் கேட்டார். கணவன் வேண்டுமென்றே தன் மீது பழி சுமத்துவதாக அந்த பெண் நீதிபதியிடம் கூறினார். இதனையடுத்து நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: மாணவி வளர்மதி கைது!