காதலியை தீ வைத்து கொளுத்திய நபர்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (09:07 IST)
தெலுங்கானாவில் மக்கள் நிறைந்த பகுதியில் நபர் ஒருவர் தனது காதலியை தீ வைத்து கொளுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் அருகே ஒரு ஆண் மற்றும் பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் நிறைந்த அப்பகுதியில் திடீரென அந்த ஆண் பையில் வைத்திருந்த மண்ணெனையை, தன்னுடன் வந்த பெண்ணின் மேல் ஊற்றி தீவைத்தான். வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடித்தாள். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்  அந்த பெண்ணை காப்பாற்றி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீக்காயம் ஏற்பட்ட பெண்ணை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். 50 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் சம்பத்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments