பாஜக தொண்டரின் சபதம்: 670 கி.மீ சைக்கிளில் பயணம்

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (18:16 IST)
பாஜக வெற்றிபெற வேண்டுமென சபதம் எடுத்த வயதான தொண்டர் ஒருவர் அதில் வெற்றிப்பெற்றதற்காக குஜராத்திலிருந்து சைக்கிளிலேயே பயணித்து வந்து மோடியை சந்தித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அமரேலியை சேர்ந்தவர் கிம்சந்த் சந்த்ராணி. வயதான இவர் பல காலமாக பாஜகவின் அடிமட்ட தொண்டனாய் இருந்து வருபவர். தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றால் சைக்கிளில் பயணித்து டெல்லி சென்று மோடியை சந்திப்பதாக சபதம் எடுத்தார்.

தற்போது பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. அதன் பொருட்டு தனது சபதத்தை நிறைவேற்றுவதற்காக குஜராத்திலிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார். 17 நாளில் 670 கி.மீ பயணித்து டெல்லிக்கு வந்து மோடியை சந்தித்துள்ளார். அவரது மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். அடுத்து அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கிம்சந்த் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

மகள் செல்போனை பார்த்து கண்டித்த அப்பா.. மகளுடன் சேர்ந்து சொந்த கணவரையே கொலை செய்த மனைவி?

மம்தா பானர்ஜி தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வாக்காளராக இருக்கிறாரா? தேர்தல் கமிஷன் நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments