Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரதட்சணை விவகாரம்: மணமகனின் பாதி தலையை வளித்தெடுத்த மர்ம நபர்கள்

Advertiesment
வரதட்சணை விவகாரம்: மணமகனின் பாதி தலையை வளித்தெடுத்த மர்ம நபர்கள்
, திங்கள், 22 அக்டோபர் 2018 (15:20 IST)
லக்னோவில் வரதட்சணை பிரச்சனையில் திருமணத்தை நிறுத்திய மணமகனின் பாதி தலைக்கு மர்ம நபர்கள் மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
லக்னோவில் வாலிபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க அந்த நபர் திடீரென தனக்கு பைக் உள்ளிட்ட சில பொருட்களை வரதட்சணையாக வேண்டும் என கேட்டுள்ளார்.
 
ஆனால் மணமகள் வீட்டாரால் அதனை ஏற்பாடு செய்துகொடுக்க முடியவில்லை. இதனால் அவர் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்த திட்டமிட்டிருந்தார். இதனிடையே மணமகன் தூங்கிய நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ, அவரின் பாதித் தலைக்கு மொட்டை அடித்துவிட்டனர்.
 
இந்த மாதிரியான வரதட்சணைப் பேய்களுக்கு இது சரியான தண்டனை என மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது : ஓ.பன்னீர் செல்வம்