நீட் தேர்வில் தனக்கு ஆறு மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது என்று நினைத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி ஒருவரின் உண்மையான மதிப்பு 590 என தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சூரியவன்ஷி என்ற 18 வயது மாணவி சமயத்தில் நீட் தேர்வு எழுதி இருந்தார். இந்த தேர்வின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள அவர் சமீபத்தில் இணையதளங்களில் வெளியான ஓ.எம்.ஆர் ஷிட்டை பார்த்தபோது அதில் தனக்கு ஆறு மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
இதனையடுத்து அவரது பெற்றோர்கள் ரீவேல்யூஷன் செய்ய முடிவு செய்தனர். ரீவேல்யூஷனில் அவர் நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 590 என தெரியவந்தது. இதனை அவரது பெற்றோர்கள் தங்களது மகள்களிடம் இதனை கூறுவதற்காக சந்தோஷமாக வீட்டிற்கு வந்தனர்
ஆனால் அதற்குள் சூரியவன்ஷி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் வெறும் 6 மதிப்பெண் மட்டுமே எடுத்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது
இந்த நிலையில் இணையதளங்களில் போலியான ஓஎம்ஆர் ஷீட்டுக்கள் வெளிவந்து இருப்பதாகவும் அதனை தேசிய தேர்வு முகமை வெளியிடவில்லை என்றும் பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சிலர் வேண்டுமென்றே போலி ஓஎம்ஆர் ஷீட்டுக்களைவெளியிட்டு உள்ளார்கள் என்றும் அதனை நம்பி யாரும் இதுபோன்று சோகமான முடிவுக்கு செல்ல வேண்டாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்