Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லோக்சபாவுக்கு முதல் பெண் பொது செயலர்

Advertiesment
லோக்சபாவுக்கு முதல் பெண் பொது செயலர்
, வியாழன், 30 நவம்பர் 2017 (18:38 IST)
லோக்சபாவின் முதல் பெண் பொதுச் செயலராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சினேகலதா ஸ்ரீவாத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த  சினேகலதா நிதி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர். தற்போது லோக்சபா பொதுச் செயலராக உள்ள அனுாப் மிஸ்ரா, விரைவில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து டிசம்பர் 15ல் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், புதிய பொதுச் செயலராக, சினேகலதா(60) நியமிக்கப்பட்டுள்ளார்.
 
லோக்சபாவின் முதல் பெண் பொது செயலர் என்ற பெருமையை பெற்றுள்ள சினேகலதா இன்று பதவி ஏற்றார்.ராஜ்யசபாவின் முதல் பெண் பொதுச் செயலராக 1993 - 1997 வரை வி.எஸ்.ரமா தேவி என்பவர் பதவி வகித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவதிப்பட்ட மக்கள் – அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் (வீடியோ)