Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலிங்கானாவில் தொடரும் ஆணவக்கொலைகள் - காதல் திருமணம் செய்த மகள், மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை

Advertiesment
தெலிங்கானாவில் தொடரும் ஆணவக்கொலைகள் - காதல் திருமணம் செய்த மகள், மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
, வியாழன், 20 செப்டம்பர் 2018 (11:00 IST)
தெலிங்கானாவில் வேற்று சாதிப் பையனை திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தை தனது மகளையும், அவரது கணவரையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் தெலிங்கானா மாவட்டம் நல்கொண்டாவில் வேற்று சாதிப் பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தை கூலிப்படை ஏவி மகளின் கண்முன்னரே அவரது காதல் கணவரை கொடூரமாக கொலை செய்தார். அந்த பெண் தற்பொழுது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
webdunia
இந்நிலையில் அதே போல் தெலிங்கானாவை சேர்ந்த மாதவி என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வேற்று சாதிப் பையனை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, கூட்ட நெரிசல் மிகுந்த சாலையில் தனது மகள் மற்றும் மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
 
இதனால் அவர்கள் இருவரும் கடுமையாக காயமடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தையை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சிறையிலிருந்து விடுதலை