Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாலையில் காதலியை அடித்த இளைஞரை கண்டித்த பிரபல நடிகர்

hydrabath
, வியாழன், 2 மார்ச் 2023 (14:42 IST)
ஐதராபாத்  நகரில் உள்ள  சாலையில் தன் காதலியை அடித்த  நபரை பிரபல நடிகர்  நாக சவுர்யா கண்டித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்  நாக சவுர்யா. இவர்  நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பலனா அப்பாயி பலனா அம்மாயி. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில்,  இன்று ஐதரபாத்  நகரில் உள்ல ஒரு சாலையில், இளைஞர் ஒருவர் தன் காதலியை அடித்துள்ளார்.

அப்போது, அதே சாலையில் நின்றிருந்த நடிகர்  நாக சவர்யா அந்த இளைஞரை கண்டித்ததுடன், அப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்கும்படி கூறினார்.

அதற்கு அந்த இளைஞர் என் காதலி அவர், அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளர்.

இதைக்கேட்டு, நடிகர் நாக சவுர்யா, காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு என்று அவரை மன்னிப்புக் கேட்கும்படி கூறினார்.  உடனே இளைஞரும், அப்பெண்ணும் அங்கிருந்து வெளியேறினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் நாக சவுர்யாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகில் அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி: இத்தாலி பிரதமர் புகழாரம்