திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த தமிழர் மரணம்..

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:52 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரிசையில் நின்ற தமிழக பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல லட்சம் பக்தர்கள் அனுதினமும் தரிசனம் செய்ய வருகை புரிகிறார்கள். இந்நிலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்றுக்கொண்டிருந்த போது, வரிசையில் நின்ற 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தீடீரென மார்பை பிடித்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை தேவஸ்தான அதிகாரிகள் மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

பின்பு அவரது சட்டை பையை போலீஸார் சோதனை செய்ததில் வேலூரில் இருந்து திருப்பதிக்கு வந்ததற்கான பஸ் டிக்கெட் இருந்துள்ளது.  இந்நிலையில் இறந்தவர் வேலூரை சேர்ந்தவரா அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்தா? அமெரிக்க ராணுவத்தின் கைவரிசையா? 5 பேர் பலி

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: புத்தாண்டில் உக்ரைன் அதிபர் அறிவிப்பு..!

விஜயை சிக்க வைத்த அஜித் வாக்குமூலம்!.. விரைவில் சம்மன்!.. பொங்கல் டெல்லியில்தானா?!...

யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்!. பல லட்சம் செலவில் தனக்குத்தானே கல்லறை கட்டிய மனிதர்!..

மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவர்.. புத்தாண்டில் பரிதாப நிகழ்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments