Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மயக்க மருந்து கொடுத்து மாணவிகளுடன் உல்லாசம்: நடன ஆசிரியர் அட்டூழியம்

Advertiesment
திருவனந்தபுரம்
, புதன், 14 நவம்பர் 2018 (14:54 IST)
திருவனந்தபுரத்தில் நடன ஆசிரியர் ஒருவன் தன்னிடம் பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை கற்பழித்துள்ளான்.
திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவன் ராகுல். இவன் அதே பகுதியில் நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தான். இவனிடம் ஏராளமான மாணவ மாணவிகள் நடனப் பயிற்சி பெற்று வந்தனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் இவனிடம் பயிற்சிக்கு சென்ற மாணவி காணாமல் போகவே இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
 
போலீஸார் ராகுலிடம் விசாரித்தபோது முதலில் யோக்கியன் மாதிரி பேசினான். அவன் மீது சந்தேகித்த போலீஸார், போலீஸ் பாணியில்  விசாரிக்கவே அவன் அனைத்து உண்மைகளையும் உளறினான்.
 
காணாமல் போன மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும், இதே போல் பல மாணவிகளை கற்பழித்திருப்பதாகவும் கூறினான். இதையடுத்து போலீஸார் அந்த அயோக்கினை கைது செய்தனர். இச்சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னொரு கட்டிங் குடுங்க: ஓடும் ஃபிளைட்டில் பெண் பயணி அலப்பறை