சாக்கடைக்குள் கிடந்த முதலை – பரபரப்பு வீடியோ

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (14:49 IST)
மஹாராஷ்டிராவில் சாக்கடைக்குள் முதலை ஒன்று கிடந்ததை பார்த்து மக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. ரத்னகிரி பகுதியிலும் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. தற்போது நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

இந்நிலையில் அங்குள்ள சிப்லானில் மக்கள் நடமாடும் பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 8 அடி நீள முதலை ஒன்று உயிருடன் கிடந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை பத்திரமாக கால்வாயிலிருந்து மீட்டார்கள்.

வெள்ளம் ஏற்பட்டபோது அருகே இருக்கும் வஷித்ரி நதியிலிருந்து இந்த முதலை இந்த பகுதிக்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த முதலை ஆற்றில் விடப்பட்டு விட்டது. ஆனாலும் இது கால்வாயினுள் கிடந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments