Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்! – குண்டு வெடித்து குழந்தை பலி!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (13:13 IST)
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில் குண்டு வெடித்து ஒரு குழந்தையும் பலியாகியுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு காஷ்மீர் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவ்வபோது அங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.

புத்தாண்டு தினமான நேற்று காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டங்ரி என்ற கிராமத்தில் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு வீட்டில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை கைப்பற்றிய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து அந்த கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

முடிகிறது ஜேபி நட்டாவின் பதவிக்காலம்.. அடுத்த பாஜக தலைவர் யார்?

செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா - 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பழத்தட்டு ஊர்வலம்!

பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால்,நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். -திருச்சி சூர்யா!

குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் தவித்து வரும் கோவை மக்கள் : 10 மணிக்கு மேல் சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்!!!

புதிய முனையதில் முதல் விமானமாக வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து பயணிகளை விமான நிலைய இயக்குனர் வரவேற்றார்

அடுத்த கட்டுரையில்
Show comments