Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

16 வயதில் இப்படி ஒரு நாவலா? சாதனை படைத்த 16வயது சிறுவன்

Advertiesment
16 வயதில் இப்படி ஒரு நாவலா? சாதனை படைத்த 16வயது சிறுவன்
, ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (20:00 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யாஷ் திவாரி என்ற 16 வயது சிறுவன் மூளை பிறழ்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பாக நாவல் ஒன்றை எழுதி சாதனை படைத்துள்ளார்.

 
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யாஷ் திவாரி என்ற 16 வயது சிறுவன்  நாவல் ஒன்றை சாதனை படைத்துள்ளார். யாஷ் திவாரி அதிகமாக புத்தகங்கள் படிப்பதிலும், இணையதளத்தில் அறிவுசார்ந்த விஷயங்களை அறிவதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
 
சி.ஜெ.டி என்ற மூளைப்பிறழ்ச்சி நோய் இவரை நாவலாசிரியராக மாற்றியுள்ளது. தனது விடுமுறை காலங்களில் இந்த நோய் குறித்த ஒரு நாவலை எழுத துவங்கினார். இல்மா ஜைடி கற்பனை கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த நாவலில் சி.ஜெ.டி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்கள் குறித்தும், மரணத்துக்கு முன்பு மீதம் இருக்கும் காலங்களை அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பது குறித்தும் அந்த நாவலில் யாஷ் திவாரி எழுதியுள்ளார்.
 
‘அதிர்வலைகளுக்கு இடையில் கொண்டாட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாவல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. புத்தகம் குறித்த வாசகர்களின் கருத்துக்களும் நல்ல முறையில் வந்துள்ளதாக யாஷ் திவாரியின் தந்தை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குப்பை பொறுக்க வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள பறவைகள்!