Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவாலை நீக்கக் கோரும் வழக்கு! ..நீதிமன்றம் எச்சரிக்கை

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (14:37 IST)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இவ்வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,  ஏற்கனவே டெல்லி துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதையடுத்து, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவர் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், இன்று அம்மனு  மீதான விசாரணை நடைபெற்றது. அதில், அவருக்கு ஜாமின்  மறுக்கப்பட்டது.
 
இவ்வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமீபத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது. இது நாடு முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக இந்தியா கூட்டணியினர் கடும் கண்டனம் கூறி வருகின்றனர்.
 
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக தொடர கூடாது என அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் 3வது முறையாக வழக்குத் தொடரப்பட்டது.
 
இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்து, வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று  தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே இவ்வழக்கில், ’’ நீதிமன்றம், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர முடியாது என நாங்கள் எப்படி சொல்ல முடியும்? இது சட்டப் பிரச்சனை அல்ல. ஒரு நடைமுறைப் பிரச்சனை. 
 
எனவே, இதில், நாங்கள் எப்படி தலையிட முடியும்? என்று கூறி, ’’அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை’’  கடந்த 4 ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்.. விளக்கம் அளித்து வருவதாக தகவல்..!

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை விழுங்கியவர் பலி: உயிர் தப்பிய கோழிக்குஞ்சு..!

கேரளாவில் போய் மருத்துவ குப்பையை கொட்டுவேன்.. நானே லாரியில் போவேன்! - அண்ணாமலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments