Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய தொழிலதிபர்

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (16:47 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தொழிலதிபர் ஒருவர் 26 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று அனைத்தும் முடப்பட்டுள்ளது. 
 
மக்கள் பலர் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவால் மேலும் பல உயிர்கள் மாய்கின்றன. 
 
மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3,15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அபுதாபியை தலைமயிடமாக கொண்டு பல நாடுகளில் இயங்கும் லூலூ சூப்பர் மார்க்கெட்டின் தலைவர், யூசுப் அலி கேரள மக்களுக்கு 26 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். யூசுப் அலி கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர் ஆவார். அவருக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இதேபோல் பல தொழிலதிபர்கள் கேரள மக்களுக்கு உதவ முன் வர வேண்டுமென, கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments