Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்களில் நெருப்போடு ஓடிய கல்லூரி மாணவன்..

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (10:21 IST)
சாலையோரத்தில் கிடந்த மின்சார வயரை மிதித்ததால் கல்லூரி மாணவன் கால்களில் நெருப்போடு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 20 வயதுடைய சுபம் ஷோனி என்ற கல்லூரி மாணவன், தனது கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையில் ஒரு மின்சார வயர் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

அதில் மின் கசிவு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. சுபம் ஷோனி அந்த மின்சார வயரை தெரியாமல் மிதித்துள்ளான். அப்போது தீ பிளம்பு ஏற்பட்டு, சுபம் ஷோனியின் கால்களில் தீ பிடித்தது. இதில் பதறிப்போன மாணவன் வந்த வழியிலேயே திரும்ப ஓட்டம் எடுத்து, ஒரு டிரம்மில் இருந்த தண்ணீரால் தனது கால்களில் பிடித்திருந்த தீயை அணைத்தான். உடனே அக்கம் பக்கத்தினர் சுபம் ஷோனியை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments