Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமரே இருந்திருந்தாலும் பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Advertiesment
ராமரே இருந்திருந்தாலும் பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
, ஞாயிறு, 8 ஜூலை 2018 (16:28 IST)
ராமரால் கூட பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது என பாஜக எம்.எல்.ஏ கூறியது சர்ச்சையாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 
 
வடமாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகிவிட்டது.
 
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், இதுகுறித்து பேசியபோது இந்து கடவுள் ராமர் பூமியில் இருந்தாலும், பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது, எனென்றால் இன்றைய உலகம் அப்படி என்றும் ஒவ்வொருவரையும் நம் சகோதரிகள் என்று கருதினால் தான் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து கடும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துக்க வீட்டில் சிரித்தபடியே செல்பி எடுத்த பிரபல மலையாள நடிகர்