Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை: மருத்துவர்கள் அதிர்ச்சி

Advertiesment
இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை: மருத்துவர்கள் அதிர்ச்சி
, திங்கள், 25 நவம்பர் 2019 (08:52 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் கொண்ட குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது பபிதா என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது
 
ஆனால் அந்த குழந்தை இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த குழந்தைக்கு ஒரே ஒரு இதயம் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் 
 
இதனையடுத்து அந்த குழந்தை தற்போது இண்டன்சிவ் கேர் யூனிட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த குழந்தைக்கு ஒரு தலை மட்டும் ஒரு கையை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
பபிதா கர்ப்பமானதில் இருந்து ஸ்கேன் எடுத்துப் பார்க்காததால் இது குறித்த விவரங்கள் தெரியாமல் இருந்துள்ளதாகவும் தற்போது அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து அந்த குழந்தையின் பெற்றோரிடம் ஆலோசித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் 
 
இரண்டு தலைகள் மூன்று கைகளுடன் குழந்தை பிறந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் அந்த குழந்தையை பார்க்க ஆர்வத்துடன் மருத்துவமனை முன் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக ஆட்சி ஒரு அவசர ”பொங்கல்”.. பங்கமாய் கலாய்த்த அழகிரி